ஜீத்து ஜோசப் இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராம்

CM| Last Updated: செவ்வாய், 15 மே 2018 (18:15 IST)
ஜீத்து ஜோசப் இயக்கத்தில் ஒரு மலையாளப் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் காளிதாஸ் ஜெயராம்.
 
மலையாள நடிகர் ஜெயராமின் மகனான காளிதாஸ், ‘மீன் குழம்பும் மண் பானையும்’ படத்தின் மூலம் நடிகரான அறிமுகமானார். அதன்பிறகு மலையாளப் படங்களில் நடித்துவரும் அவர், அடுத்ததாக ‘நேரம்’, ‘பிரேமம்’ படங்களை இயக்கிய அல்போன்ஸ் புத்ரன் இயக்கத்தில், ஒரு தமிழ்ப் படத்தில் நடிக்க இருக்கிறார்.
 
அதைத் தொடர்ந்து, ‘த்ரிஷ்யம்’ என்ற சூப்பர் ஹிட் படத்தைக் கொடுத்த ஜீத்து ஜோசப் இயக்கத்தில் ஒரு மலையாளப் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஜீத்து ஜோசப் தற்போது இம்ரான் ஹாஸ்மி மற்றும் ரிஷி கபூரை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். அது முடிந்தபிறகு காளிதாஸை இயக்கப் போகிறார்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :