ஞாயிறு, 29 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: திங்கள், 31 அக்டோபர் 2016 (18:13 IST)

தம்பி டேய் கலக்கிட்ட... கார்த்தியை புகழ்ந்த சூர்யா

காஷ்மோரா படத்தைப் பார்த்த சூர்யா, அதன் நாயகன் - தனது தம்பி கார்த்தியை உணர்ச்சிவசப்பட்டு பாராட்டியுள்ளார்.

 
பருத்திவீரன் பார்த்து முடித்ததும் கார்த்திகை கட்டிப் பிடித்துப் பாராட்டினேன். இப்போது மலைத்துப் போய் சில அடிகள் தள்ளி நின்று பார்க்கிறேன். தம்பி, டேய் கலக்கிட்ட என்று மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
 
படத்தில் இடம்பெற்ற அனைத்துக் கலைஞர்களையும் பாராட்டியுள்ள அவர், இது பெரிய திரையில் ரசிக்கக் கூடிய முழு பொழுதுப்போக்கு திரைப்படம், திரையரங்கில் இதனை பாருங்கள் என்று கூறியுள்ளார்.