வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 22 மே 2019 (13:13 IST)

ரசிகர்கள் புகழ்ந்து தள்ளும் "மிஸ்டர் லோக்கல்" வீடியோ பாடல்!

இளைஞர்களின் இன்ஸ்பிரேஷன் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்துள்ள மிஸ்டர் லோக்கல் படத்தின் வீடியோ பாடல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 
இயக்குனர் ராஜேஷ்  இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நயன்தாரா நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையில் வெளிவந்த "மிஸ்டர் லோக்கல்" திரைப்படம் எதிர்மையான விமர்சனங்களை பெற்றி தோல்வியை தழுவியது. 
 
பல்வேறு சினிமா விமர்சகர்களால் இப்படம் மோசமாக விமர்சிக்கப்பட்டாலும் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் அவரை ஊக்கப்படுத்தி இதனை ஏற்றுக்கொண்டனர். இதனால் இப்படம் திரையரங்குகளில் ஓரளவிற்கு ஓடிக்கொண்டிருக்கிறது.
 
இந்நிலையில் தற்போது மிஸ்டர் லோக்கல் படத்தில்  ஓப்பனிங் பாடலான "கலக்கலு மிஸ்டர் லோக்கலு" என்ற பாடல் வீடியோ இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.படத்தின் நாயகன் சிவகார்திகேயனே பாடியுள்ள இந்த பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வைரலாகி வருகிறது.