1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: சனி, 28 பிப்ரவரி 2015 (11:02 IST)

காக்கி சட்டைக்கு வரிச்சலுகை

தமிழில் பெயர் வைத்து, யு சான்றிதழ் வாங்கினாலும் பல படங்களுக்கு வரிச் சலுகை கிடைப்பதில்லை. ஆளும்கட்சியின் அன்புக்கு பாத்திரமானவராகவும் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் அவர்களின் எதிர்ப்புக்கு ஆளாகாதவராக இருக்க வேண்டும்.
 

 

 
மேலே சொன்ன எல்லா தகுதிகளும் காக்கி சட்டைக்கு இருப்பதால் அரசு வரிச்சலுகை அளித்துள்ளது. 
 
வரிச்சலுகை அளிக்கப்பட்ட படங்களுக்கு திரையரங்குகள் பார்வையாளர்களிடம் கேளிக்கை வரி வசூலிக்கக் கூடாது என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால் தொடர்ந்து இந்த உத்தரவை காலில் போட்டு மிதித்து வருகின்றன திரையரங்குகள். திரையரங்குகளை கண்காணிக்க வேண்டிய வணிகவரித்துறை லஞ்சம் வாங்கிக் கொண்டு திரையரங்குகள் மேல் நடவடிக்கை எடுக்காமல் ஊழல் பெருச்சாளியாக நெளிந்து கொண்டிருக்கிறது. இந்த விஷயத்தில் அரசு என்ற ஒன்று தமிழகத்தில் இருக்கிறதா என்பதே ஐயமாக உள்ளது.
 
திருட்டு விசிடிக்கு எதிராக குரல் கொடுக்கும் நம் அட்டகத்தி நடிகர்கள் இந்த திரையரங்கு கொள்ளையை கண்டும் காணாமல் கள்ள மௌனம் காக்கிறார்கள்.
 
இந்த அநியாயங்களுக்கு என்றேனும் முடிவு வருமா?