ராணா டகுபதியைக் காதலிக்கும் காஜல் அகர்வால்?

cauveri manickam| Last Modified வியாழன், 13 ஜூலை 2017 (12:58 IST)
‘பாகுபலி’ வில்லன் ராணா டகுபதியை, காஜல் அகர்வால் காதலிக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. 
காஜல் அகர்வால் சினிமாவில் நடிக்கவந்து 10 வருடங்களுக்கும் மேலாகிவிட்டது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அஜித்துடன் ‘விவேகம்’, விஜய்யுடன் ‘மெர்சல்’ என தமிழ்நாட்டின் டாப் கலெக்ஷன் நடிகர்களோடு ஒரே நேரத்தில் நடித்துள்ள காஜல், தெலுங்கில் ராணா டகுபதி ஜோடியாக ‘நேனே ராஜு நேனே மந்த்ரி’ படத்தில் நடித்து வருகிறார்.

32 வயதான காஜலிடம் திருமணம் குறித்துக் கேட்டால், “படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருப்பதால், திருமணத்தைப் பற்றி யோசிக்க எனக்கு நேரமில்லை. ஆனால், கண்டிப்பாக காதல் திருமணம் தான் செய்து கொள்வேன். அவர் சினிமாவைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும் என அவசியமில்லை. ஆனால், அவர் நிச்சயம் 6 அடி உயரத்தில் இருக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

ராணா டகுபதி தான் 6 அடி உயரத்திற்கும் மேல் இருக்கிறார். எனவே, இருவருக்கும் காதலாக இருக்கலாமோ என்று தகவல் கசிந்து வருகிறது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :