புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: சனி, 7 நவம்பர் 2020 (16:00 IST)

ஹனிமூனுக்கு பறந்த காஜல் அகர்வால்: எந்த நாட்டிற்கு?

ஹனிமூனுக்கு பறந்த காஜல் அகர்வால்: எந்த நாட்டிற்கு?
சமீபத்தில் மும்பை தொழிலதிபர் கவுதம் என்பவரை திருமணம் செய்துகொண்ட நடிகை காஜல் அகர்வால் தற்போது தனது காதல் கணவருடன் ஹனிமூனுக்கு செல்ல உள்ளார். இதுகுறித்த புகைப்படங்கள் அவரது இன்ஸ்டாவில் வைரலாகி வருகிறது
 
திருமணம் குறித்த தகவல் மற்றும் புகைப்படங்களையும் திருமணத்திற்கு பின்னர் நடந்த சடங்குகள் குறித்தும் தனது இன்ஸ்டாவில் அடிக்கடி வெளியிட்டு வந்த காஜல் தற்போது தனது இன்ஸ்டா ஸ்டோரியில் ஹனிமூனுக்கு பறக்க தயாராகிவிட்டதாக தெரிவித்துள்ளார்.
 
தனது மற்றும் கணவரின் பாஸ்போர்ட் மற்றும் பவுச்சின் புகைப்படங்களை பதிவு செய்த காஜல், ‘ரெடி டு கோ என்று குறிப்பிட்டுள்ளார்.  இதனையடுத்து அவர்கள் வெளிநாட்டுக்கு ஹனிமூன் செல்கின்றனர் என்பது தெரிய வந்துள்ளது. ஆனால் அவர்கள் எந்த நாட்டுக்குச் செல்கின்றனர் என்பதை ரகசியமாக வைத்துள்ளார். இருப்பினும் ஹனிமூன் புகைப்படங்களை காஜல் அகர்வால் பதிவு செய்யும்போது அவர் எந்த நாட்டிற்கு சென்றுள்ளார் என்பதை ரசிகர்கள் கண்டுபிடித்துவிடுவார்கள்