சூதாட்டம் ஆடிய காஜல் அகர்வால்...! ஒரே இரவில் இத்தனை கோடியா?

Last Updated: செவ்வாய், 23 ஏப்ரல் 2019 (11:27 IST)
தமிழ் சினிமாவின் டாப் நடிகைகளில் ஒருவரான நடிகை காஜல் அகர்வால் முன்னணி நடிகர்கள் பலருடன் சேர்ந்து நடித்துவிட்டார். தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் போன்ற வேற்று மொழி படங்களிலும் தூள் கிளப்பி வருகிறார் காஜல்.


 
சினிமா நடிகைகள் பலரும் தனது துறையில் முழுநேர வேலை பார்த்துக்கொண்டே சைடில் மாடலிங், பொது நிகழ்ச்சி , கடை திறப்பு போன்றவற்றில் பங்கேற்று கோடி கணக்கில் பணத்தை புரட்டுவார்கள். 


 
அந்தவகையில் தற்போது காஜல் அகர்வால் மற்ற நடிகைகளுக்கெல்லாம் ஒரு படி மேலே சென்று காசு பார்க்கத் தொடங்கியுள்ளார். பப் , கிளப் போன்றவற்றில் கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கு நடிகைகளை அழைத்து வந்து அதன் மூலம் பணம் சம்பாதிக்கும் கும்பல் அதில் பங்கேற்கும் நடிகைகளுக்கு  லட்ச கணக்கில் பணத்தை கொட்டி கொடுப்பார்கள். அப்படித்தான் தற்போது நடிகை காஜல் அகர்வாலை  சூதாட்ட கிளப்பிற்கு வரவைத்து அங்குள்ள கஸ்டமர்களுடன் உரையாடவைத்து அவர்களுக்கு காசு கொடுக்கும் விஷயம் தற்போது அம்பலமாகியுள்ளது.


 
சமீபத்தில் இலங்கையில் பிரபலமான கேசினோ சூதாட்ட கிளப்பில் இந்த சூதாட்ட வருமானத்தை பார்த்திருக்கிறார் நடிகை காஜல் அகர்வால். காஜலை அழைத்த சென்ற கிளப் நிர்வாகிகள் கோடி கணக்கில் பணத்தை கொட்டி கொடுத்ததுடன் அங்குள்ள கஸ்டமர்களுடன் உரையாட வைத்து மகிழ்ந்தனர்.
இதில் மேலும் படிக்கவும் :