காஜல் அகர்வாலுக்கு வந்த ஆசையைப் பாருங்களேன்…


Cauveri Manickam(Murugan)| Last Modified செவ்வாய், 1 ஆகஸ்ட் 2017 (12:25 IST)
த்ரிஷா போலவே, காஜல் அகர்வாலுக்கும் ரஜினியுடன் நடிக்க வேண்டும் என்பதுதான் ஆசையாம்.

 

 
ஹீரோயினாக த்ரிஷா சினிமாவில் அறிமுகமாகி, 15 வருடங்கள் ஆகிவிட்டன. விஜய், அஜித், சூர்யா என முன்னணி நடிகர்கள் மட்டுமின்றி, இளம் நடிகர்கள், வளர்ந்துவரும் நடிகர்கள் பலருடனும் ஜோடியாக நடித்துவிட்டார். அவ்வளவு ஏன்… கமலுடன் கூட நடித்துவிட்டார். ஆனால், ‘சூப்பர் ஸ்டார்’ என்று அழைக்கப்படும் ரஜினியுடன் மட்டும் இன்னும் ஒரு படம் கூட நடிக்கவில்லை. அந்த ஆசை, நிறைவேறாத ஏக்கமாக த்ரிஷாவின் மனதில் இருந்துகொண்டே இருக்கிறது.
 
இந்த லிஸ்ட்டில், காஜல் அகர்வாலும் இடம்பிடித்துள்ளார். அவர் சினிமாவுக்கு வந்து 10 வருடங்கள் ஆகிறது. தெலுங்கு மற்றும் தமிழில் நடித்துவரும் காஜல், அவ்வப்போது ஹிந்தியிலும் நடித்து வருகிறார். தமிழில் அஜித், விஜய் என ஒரே நேரத்தில் இருபெரும் நடிகர்களுடன் நடித்துள்ள காஜலுக்கு, ரஜினியுடன் நடிக்க வேண்டும் என்பது ஆசையாம். காஜல் ஆசையாவது நிறைவேறுமா?

webdunia

இதில் மேலும் படிக்கவும் :