வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வியாழன், 21 ஏப்ரல் 2022 (12:41 IST)

பிரசவத்திற்கு பின்னும் அழகாக இருப்பேன்: காஜல் அகர்வால்

kajal
நடிகை காஜல் அகர்வாலுக்கு நேற்று முன்தினம் ஆண் குழந்தை பிறந்தது என்பதும் அந்த குழந்தைக்கு நீல் கிட்சலு என்ற பெயர் வைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியானது 
 
இந்த நிலையில் தனது பிரசவம் குறித்து காஜல் அகர்வால் நெகிழ்ச்சியாக ஒரு இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார் 
 
அதில் என் குழந்தை இந்த உலகிற்கு வரவேற்பதில் உற்சாகமும் மகிழ்ச்சியும் அடைகிறேன் என்றும், இது ஒரு மகத்தான திருப்திகரமான அனுபவம் என்றும், அந்த ஒரு கணம் எனக்கு அன்பின் ஆழமான வலிமையை புரிய வைத்தது என்றும், மிகப் பெரிய அளவிலான நன்றி உணர்வை உணர வைத்தது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
 
 உண்மையில் பிரசவத்திற்கு பின் கவர்ச்சியாக இல்லை என்றாலும் நிச்சயம் அழகாக இருப்பேன் என்று அவர் தெரிவித்தார்