வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 21 ஜனவரி 2022 (09:36 IST)

கைதி 2 படத்தை தயாரிக்க விரும்பும் தயாரிப்பாளர்!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்து கைதி 2 படத்தை இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்து 2019ல் வெளியான படம் கைதி. தமிழில் மிகப்பெரும் வரவேற்பையும் வசூலையும் பெற்ற இந்த திரைப்படத்தை வேறு மொழிகளிலும் ரீமேக் செய்ய பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் கைதி 2 படம் எப்போது தொடங்கும் என பலரும் ஆவலாக காத்துள்ளனர்.

இந்நிலையில் விக்ரம் படத்தை முடித்து விட்டு லோகேஷ் அந்த படத்தைதான் இயக்குவார் என சொல்லப்படுகிறது. கைதி 2 படத்தை தயாரிக்க மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர் லலித் குமார் விரும்புவதாகவும், அதற்காக லோகேஷ் கனகராஜை அனுகி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் முதல் பாகத்தை தயாரித்த எஸ் ஆர் பிரபு இதற்கு ஒத்துக்கொள்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.