வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Updated : செவ்வாய், 23 ஆகஸ்ட் 2016 (15:37 IST)

கைதி நம்பர் 150 - இது கத்தி தெலுங்கு ரீமேக்கின் பெயர்

கைதி நம்பர் 150 - இது கத்தி தெலுங்கு ரீமேக்கின் பெயர்

சிரஞ்சீவியின் 150 -வது படத்துக்கு கைதி நம்பர் 150 என பெயர் வைத்துள்ளனர். பாஸ் இஸ் பேக் என்று கேப்ஷனும் வைக்கப்பட்டுள்ளது.

 

 
 
2007 -இல் வெளியான சங்கர்தாதா ஜிந்தாபாத் சிரஞ்சீவியின் 149 -வது படம். அதன் பிறகு அரசியலில் நுழைந்த சிரஞ்சீவி படங்களில் நடிக்கவில்லை. தனது கட்சியை காங்கிரஸுடன் இணைத்தவர், தற்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார். 
 
தமிழில் வெளியான கத்தி படத்தின் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி நடிக்கிறார். வி.வி.வினாயக் இயக்கும் இந்தப் படம் சிரஞ்சீவியின் 150 -வது படமாக தயாராகிறது. இந்தப் படத்துக்கு கைதி நம்பர் 150 என பெயர் வைத்துள்ளனர்.