Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

கடுகு படத்தை வாங்கிய சூர்யாவின் 2டி

Sasikala| Last Modified செவ்வாய், 14 பிப்ரவரி 2017 (16:05 IST)
விஜய் மில்டன் இயக்கியுள்ள கடுகு படத்தின் தமிழக திரையரங்கு விநியோக உரிமையை சூர்யாவின் 2டி நிறுவனம்  வாங்கியுள்ளது.

 
சூர்யா 2டி என்டர்டெய்ன்மெண்ட் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி 36 வயதினிலே, பசங்க 2 உள்ளிட்ட படங்களை  தயாரித்தார். ஜோதிகா நடித்துவரும் மகளிர் மட்டும் படத்தையும் 2டி என்டர்டெய்ன்மெண்ட் தயாரித்து வருகிறது.
 
தற்போது விஜய் மில்டன் இயக்கத்தில் ராஜகுமாரன், பரத் நடித்துள்ள கடுகு படத்தின் உரிமையையும் 2டி நிறுவனம்  வாங்கியுள்ளது. இதன் மூலம் பிற நிறுவனங்களின் படங்களை வாங்கி விநியோகிக்கும் விநியோகத்துறையிலும் சூர்யா காலடி  எடுத்து வைத்துள்ளார்.
 
கடுகு மார்ச் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :