வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 7 நவம்பர் 2016 (15:34 IST)

சென்னை டூ புதுச்சேரி... ரோடு மூவியாக தயாராகியிருக்கும் கடவுள் இருக்கான் குமாரு

ஜீ.வி.பிரகாஷ் நடிப்பில் ராஜேஷ் இயக்கியிருக்கும் கடவுள் இருக்கான் குமாரு விரைவில் திரைக்கு வருகிறது. இந்தப் படம் ரோடு மூவியாக தயாராகியிருக்கிறது. 


 
 
சென்னை டூ புதுச்சேரிவரை நடக்கும் பயணத்தில் இந்தக் கதை சொல்லப்படுகிறது.
 
ராஜேஷ் படம் என்றால் டாஸ்மாக்குக்கான விளம்பரப்படம் போல் டாஸ்மாக் காட்சிகள் அமோகமாக இருக்கும். இந்தப் படத்தில் கதைக்களத்தில் புதுச்சேரியே வருகிறது. மது படத்தில் வெள்ளமாக ஓடும் என்று தானே எதிர்பார்ப்பீர்கள்?
 
ஆனால், இந்தப் படத்தில் குடிக்கிற காட்சிகளே இல்லையாம். படக்குழு சத்தியம் செய்து சொல்கிறது.
 
சைடிஷ் இல்லாத சரக்கு மாதிரி குடியில்லாத ராஜேஷ் படம்... ரசிகர்களுக்கு பிடிக்குமா?