வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 31 மார்ச் 2023 (08:35 IST)

கே ஜி எஃப் என நம்பி வாங்கிய விநியோகஸ்தர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்திய கப்ஜா!

கன்னட சினிமாவின் இரு முன்னணி நடிகர்களான உபேந்திரா மற்றும் கிச்சா சுதீப் ஆகிய இருவரும் இணைந்து நடித்துள்ள படம் கடந்த வாரம் ரிலீஸ் ஆனது. கன்னட சினிமாவில் இருந்து அதிகளவில் ஆக்‌ஷன் திரைப்படங்கள் வெளியாகி இந்திய அளவில் கவனம் பெற்று வருகின்றன. கேஜிஎப் திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு அதே பாணியில் வெளியாகும் இந்த படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

இந்த படத்தில் நடிகை ஸ்ரேயா சரண், நடிகர்கள் முரளி ஷர்மா, ஜான் கொக்கேன், நவாப் ஷா, பிரகாஷ் ராஜ் , ஜகபதி பாபு, கோட்டா சீனிவாச ராவ், கபீர் துஹான் சிங், பொமன் இரானி, சுதா, தேவ் கில், எம். காமராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஏ. ஜெ. ஷெட்டி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு கே. ஜி எஃப் படப்புகழ் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் இசையமைத்திருக்கிறார்.  ஆனால் ரிலீஸுக்கு பிறகு மிக மோசமான விமர்சனங்களைப் பெற்றது. அது மட்டுமில்லாமல் ட்ரோல்களுக்கும் ஆளானது.

மிகப்பெரிய தொகைக்கு விற்கப்பட்ட இந்த படம் விநியோகஸ்தர்களுக்கு மிகப்பெரிய நஷ்டத்தை இப்போது ஏற்படுத்தியுள்ளது.