ஆஜித் ஒரு நல்ல புத்தகம்: கபிலன் வைரமுத்து


Abimukatheesh| Last Modified செவ்வாய், 1 ஆகஸ்ட் 2017 (17:46 IST)
அஜித்துடன் உரையாடியது நல்ல புத்தகத்தைப் படித்த உணர்வைத் தந்தது என்று கபிலன் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

 

 
சிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள திரைப்படம் விவேகம். அஜித் நடித்த படங்களிலே இதுதான் அவருக்கு பிரம்மாண்டமான திரைப்படம். தொடர்ந்து இரண்டு வெற்றிகளை கொடுத்த சிவா - அஜித் அடுத்து மூன்றாவது வெற்றியை கொடுக்க உள்ளனர். வைரமுத்துவின் வாரிசான கபிலன் வைரமுத்து விவேகம் படத்தில் இரண்டு பாடல்கள் எழுதியுள்ளார்.
 
கபிலன் கவண் படம் மூலம் சினிமாவில் திரைக்கதை எழுத்தாளராக அறிமுகமானவர். தற்போது விவேகம் படத்தின் திரைக்கதையிலும் அவரது பங்களிப்பு உள்ளது. இந்நிலையில் கபிலன் அஜித் பற்றி கூறியதாவது:-
 
அவரிடம் நிறைய கற்றுக்கொண்டேன். அவருடன் உரையாடியது நல்ல புத்தகத்தைப் படித்த உணர்வைத் தந்தது என்று தெரிவித்துள்ளார். அவரது தொலைநோக்கு பார்வை, கடுமையான உடல் பயிற்சி, தொழில் பக்தி ஆகியவை அவர் மேல் நான் கொண்டுள்ள மரியாதையை மேலும் பெரிதாக்கியது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :