கபாலி நஷ்டம் - ஆந்திராவிலிருந்து வரும் அவலக்குரல்கள்
கபாலி படம் வசூல் சாதனை செய்ததாக ஒருபுறம் கூறப்படும் நிலையில், அதிக தொகை கொடுத்து கபாலியின் தெலுங்கு திரையரங்கு விநியோக உரிமையை வாங்கியவர்கள் நஷ்டம் என்று புலம்புவதாக ஆந்திரா மற்றும் தெலுங்கானாவிலிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.
கபாலியின் தெலுங்குப் பதிப்பு ஆந்திராவில் முப்பது கோடிகளுக்கு விலைபோனதாக கூறப்படுகிறது. படத்தின் ஓபனிங் மிக நன்றாக இருந்ததாகவும் வார நாள்களில் படத்தின் வசூல் கணிசமாக குறைந்ததால் போட்ட முதலயே எடுக்க முடியாமல் விநியோகஸ்தர்கள் திணறுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேநேரம் நிஜாம் பகுதி விநியோகஸ்தர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். அவர்கள் போட்ட பணத்தை படம் எடுத்திருக்கிறது.
நஷ்டப்பட்ட விநியோகஸ்தர்கள் ஒன்றிணைந்து அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து விரைவில் ஆலோசித்து முடிவு எடுக்க உள்ளனர்.