வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 11 ஜூன் 2018 (19:20 IST)

காத்து வாங்கும் காலா தியேட்டர்கள் - மூன்றே நாட்களில் வெறிச்சோடியது

தமிழகம் முழுவதும் காலா திரைப்படம் வெளியான பல தியேட்டர்களில் டிக்கெட் விற்பனை மந்தமாக இருப்பது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பல்வேறு சிக்கல்களுக்கு இடையே காலா திரைப்படம் கடந்த 7-ம் தேதி தமிழகத்தில்  650 க்கும் மேற்பட்ட திரையரங்குகளிலும் ,அதே நேரத்தில் உலக அளவில் 2,500  திரையரங்குகளிலும் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது.  
 
வழக்கமாக ரஜினி படம் வெளியாகிறது எனில், முன்பதிவு தொடங்கியவுடனேயே ஒரு வாரத்திற்கு டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டு விடும். ஆனால் காலா படத்திற்கு வார இறுதிநாட்களில் கூட முன்பதிவு மந்தமாக இருந்தது.
 
இந்நிலையில் படம் வெளியான மூன்றே நாட்களில் பல தியேட்டர்கள் வெறிச்சோடி காட்சியளிக்கின்றன. பல தியேட்டர்களில் 30, 40 பேர்களே படத்தை பார்க்க வருகின்றனர்.
 
இதற்கு முக்கிய காரணம் தூத்துக்குடி கலவரம் தொடர்பாக ரஜினி தெரிவித்த கருத்தால், பலர் ரஜினி படத்தை புறக்கணித்ததாகவும், மேலும் பலர் இணையதளங்களிலும், திருட்டு விசிடிக்களிலும் படத்தை பார்த்ததால் தான் இந்த நிலைமை என கூறப்படுகிறது.