1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Murugan
Last Updated : சனி, 17 ஜூன் 2017 (12:29 IST)

மனநலம் பாதித்து..பிச்சை எடுக்கும் காதல் பட காமெடி நடிகர்..

காதல் படத்தில் ஒரு காமெடி நகைச்சுவையில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமான நடிகர் பல்லு பாபு, மனநலம் பாதித்து, சென்னையில் உள்ள ஒரு கோவிலில் பிச்சை எடுத்து வருவது தெரியவந்துள்ளது.


 

 
காதல் படத்தில் விருச்சகாந்த் என பெயர் வைத்துக்கொண்டு..  நடிச்சா  ஹீரோ சார்.. நான் வெய்ட் பன்றேன் சார். முதல்ல சினிமா. அப்புறம் அரசியல்.. அப்புறம் பி.எம்” என அவர் பேசிய வசனத்தை கேட்டு சிரிக்காதவர்களே இருக்க முடியாது. ஆனால், அதன்பின் அவருக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை.
 
இந்நிலையில், இவரின் பெற்றோர்களும் இறந்து போக, சென்னை எழும்பூருக்கு அருகிலிருக்கும் சூளை பகுதியில் ஒரு கோவிலில் பிச்சை எடுத்துக்கொண்டிருக்கிறார் என்ற அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது. இவரை பேட்டி எடுக்க வேண்டும் என விருப்பப்பட்டு, அவரை தேடி அலைந்த ஒரு பத்திரிக்கையாளர் மூலம் இந்த தகவல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
 
அந்த கோவிலில் கொடுக்கும் உணவை சாப்பிட்டுக்கொண்டு அங்கேயே கிடக்கிறார் பல்லு பாபு. மேலும், சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் போலவும் அவர் பேசுகிறாராம்.  ‘அவன் மெண்டல் ஆகிட்டான் சார்’ என அந்த பகுதி மக்கள் கூறுவதை கேட்டு அதிர்ச்சியைடைந்து கண்கலங்கியபடி திரும்பியுள்ளார் அந்த பத்திரிக்கையாளர்.