வியாழன், 16 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : செவ்வாய், 22 செப்டம்பர் 2020 (16:03 IST)

பறவைகளா.... க.பெ. ரணசிங்கம் படத்தின் பாடல் அப்டேட் இதோ!

பெ.விருமாண்டி இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் க/பெ.ரணசிங்கம். இந்தப் படத்தில் கவுரவ கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ளார். இவர்களுடன் சமுத்திரக்கனி, 'பூ' ராம், வேல.ராமமூர்த்தி, பவானி ஸ்ரீ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பீட்டர் ஹெய்ன் ஸ்டண்ட் மாஸ்டராகவும், சண்முகம் முத்துசாமி வசனகர்த்தாவாகவும் பணிபுரிந்துள்ளனர்.

கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். கொரோனா ஊரடங்கில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இப்படத்தின் பணிகள் மீண்டும் துவங்கி விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. லாக்டவுனில் வெளியான இப்படத்தின் டீசர் , பர்ஸ்ட் லுக் உள்ளிட்டவை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

இதையடுத்து படம் OTT தலத்தில் வெளியாகப்போவதாக வதந்திகள் பரவியது. பின்னர் தயாரிப்பு தரப்பு அதற்கு முற்றுப்புள்ளி வைத்தது. இந்நிலையில் செம அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது. அதாவது இப்படத்தின் பறவைகளா எனும் மூன்றாம் பாடல் நாளை 5 மணியளவில் வெளியாகிறது.  வைரமுத்து பாடல் வரிகள் எழுத ஜிப்ரான் இசையமைத்துள்ளது கூடுதல் தகவல்.