திருட்டு வீசிடியை நல்ல படங்கள் எடுத்து பிறகு ஒழிச்சுக்கலாம்: கே.பாக்யராஜ் கிண்டல்!!


Sugapriya Prakash| Last Modified செவ்வாய், 11 ஏப்ரல் 2017 (13:22 IST)
ஆடியோ வெளியீடு விழாவில் பங்கேற்ற இயக்குனர் கே.பாக்யராஜ் திருட்டு வீசிடியை ஒழிப்பது குறித்து பேசினார்.

 
 
கே.பாக்யராஜ் கூறியதாவது, திருட்டு விசிடியால் சினிமாவுக்கு பாதிப்பு ஏற்படுகிறது என்பது 10 சதவீதம் தான். ஆனால், அதைவிட நாம் நல்ல படம் எடுக்கவேண்டும் என்பது தான் இங்கு முக்கியம்.
 
தயாரிப்பாளர் சங்கத்திற்கு புதிய அணி தேர்வாகியிருக்கிறார்கள். அவர்களையெல்லாம் பிடித்துப்போய் யாரும் தேர்வு செய்யவில்லை. தயாரிப்பாளர் சங்கத்தில் உள்ள பிரச்சினை இருக்கிறது. அதை நீங்களாவது சரிசெய்வீர்கள் என்பதற்காகத்தான் உங்களுக்கு ஓட்டு போட்டு தேர்வு செய்திருக்கிறார்கள் என தெரிவித்தார்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :