இன்னும் நிறைய பேசியிருக்கனும்: நாச்சியார் வசனம் குறித்து ஜோதிகா...

Last Updated: வியாழன், 1 பிப்ரவரி 2018 (16:39 IST)
பிரபல இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் ஜோதிகா நடித்த நாச்சியார் திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் முடிந்துவிட்டது. படத்திற்கு 'U/A' சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

இளையராஜா இசையமைத்துள்ள இந்த படத்தில் ஜோதிகா, ஜிவி பிரகாஷ், ராக்லைன் வெங்கடேஷ் உள்பட பலர் நடிதுள்ளனர். இந்த படத்தை பாலாவின் B ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இப்படத்தின் டீஸர் வெளியாகிய போது அதில் ஜோதிகா பேசியிருந்த ஒரு கெட்ட வார்த்தை மிகவும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தற்போது ஜோதிகா இதற்கு விளக்கமளித்துள்ளார். இது குறித்து அவர் கூறியது பின்வருமாறு...
நாச்சியார் டீசரில் நான் பேசியது கெட்ட வார்த்தைதான், அதை நான் மறுக்கவில்லை. ஆனால் அந்த வார்த்தை நிறைய படங்களில் நிறைய ஆண்கள் பேசியிருக்கிறார்கள். ஒரு பெண் முதன்முறையாக பேசுவதால் அது விவாத பொருளாக மாறியது.


படத்தில் அந்த கதாபாத்திரத்துக்கு ஏற்ற வசனம் அது. இன்னும் கொஞ்சம் டயலாக் சேர்த்து பேசணும். ஆனால் நான் கொஞ்சம் குறைத்து பேசியிருக்கிறேன். படத்தில் குறிப்பிட சூழலில் இந்த வசனம் வரும் போது, ரசிகர்கள் கண்டிப்பாக அதை ஏற்று கொள்வார்கள் என நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :