1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Abimukatheesh
Last Updated : செவ்வாய், 28 பிப்ரவரி 2017 (15:04 IST)

பாலாவின் நாச்சியார் பர்ஸ்ட் லுக்

இயக்குநர் பாலா இயக்கத்தில் ஜோதிகா மற்றும் ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் நடிப்பில் உருவாகும் நாச்சியார் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.


 

 
பாலா படத்தில் நடிகை ஜோதிகா முதன்முதலாக நடிப்பதாக சில நாட்களுக்கு அறிவிப்பு வெளியானது. இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கிறார். இந்த படத்திற்கு நாச்சியார் என பெயரிடப்பட்டுள்ளது. நாச்சியார் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதால் பெரும்பாலும் கதாநாயகியை மையமாக வைத்துதான் கதை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இரண்டு போஸ்டர் வெளியாகியுள்ளது. முதல் போஸ்டரில் ஜி.வி. மற்றும் ஜோதிகா இருப்பது போன்றும், இரண்டாவது போஸ்டரில் ஜோதிகா மட்டும் இருப்பது போன்றும் வெளியாகியுள்ளது.


 

 
ஜி.வி. மற்றும் ஜோதிகா இருவருக்கும் இதுதான் பாலா இயக்கத்தில் முதல் படம். இந்த படத்திற்கு பிறகு ஜி.வி.பிரகாஷ் தமிழ் சினிமாவில் அவருக்கென ஒரு இடத்தை பிடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.