1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: வியாழன், 27 நவம்பர் 2014 (11:40 IST)

ஜோதிகாவுடன் நடிக்கும் விருமாண்டி அபிராமி

விருமாண்டி படத்துக்குப் பிறகு காணாமல் போன அபிராமி திடீரென திருமணம் செய்து கணவருடன் அமெரிக்காவில் செட்டிலானார். பிறகு தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக திரும்பி வந்தார். அவரை மீண்டும் சினிமாவுக்கு அழைத்து வந்தவர் கமல்.
விஸ்வரூபம் படத்தில் பூஜா குமாருக்கு டப்பிங் பேச அபிராமியைதான் தேர்வு செய்தார் கமல். அவர் எங்கிருக்கிறார் என தேடிப் பிடித்து டப்பிங் பேச வைத்தார். அவரது நேரம், மீண்டும் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. மலையாளத்தில் சுரேஷ்கோபி, ஜெய்சூர்யா, ஆசிப் அலி நடித்த அப்போதகரே படத்தில் சுரேஷ்கோபியின் மனைவியாக சினிமாவில் அபிராமி ரீ என்ட்ரியானார்.
 
தமிழில் தற்போது ஜோதிகா நடித்துவரும் மலையாளப் படம் ஹவ் ஓல்ட் ஆர் யூ படத்தில் ஜோதிகாவின் தோழியாக நடிக்க ஒப்புக் கொண்டு நடித்து வருகிறார்.