ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 24 செப்டம்பர் 2024 (15:08 IST)

இது அனிருத் காலம்… அடுத்த ஏ ஆர் ரஹ்மான் அவர்தான்… ஜூனியர் என் டி ஆர் கருத்து!

தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குனரான கொரடலா சிவா இயக்கத்தில் உருவாகும் ‘தேவரா’ ஜூனியர் என் டி ஆர், ஜான்வி கபூர், பிரகாஷ் ராஜ் மற்றும் சைஃப் அலிகான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.  படத்தின் இசையமைப்பாளராக அனிருத் பணியாற்ற, ஒளிப்பதிவாளராக ரத்னவேலு பணிடாற்றியுள்ளார்.

இந்த படம் கடலை கதைக்களமாகக் கொண்டு உருவாகி வருகிறது.இந்நிலையில் இந்த படத்தினை இரண்டு பாகங்களாக உருவாக்கி வருகின்றனர். முதல் பாகம் செப்டம்பர் 27 ஆம் தேதி வெளியாகிறது. தெலுங்கில் வெளியாகும் அதே நாளில் தமிழிலும் இந்த படம் ரிலீஸாகிறது. இதற்காக சென்னை வந்து ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் ஜூனியர் என் டி ஆர் கலந்துகொண்டார்.

இதையடுத்து ஆனந்த விகடன் ஊடகத்துக்கு அளித்த் நேர்காணலில் ஜூனியர் என் டி ஆர், படத்தின் இசையமைப்பாளர் அனிருத் குறித்து பேசியுள்ளார். அதில் “இப்போது இந்திய இசை குறித்துப் பேசினால் அனிருத் பெயரை குறிப்பிடாமல் பேச முடியாது. அவர் தொட்டாலே பாடல் ஹிட்டாகுது. இது அனிருத் காலம். அவர்தான் அடுத்த ஏ ஆர் ரஹ்மான்.  தேவரா படத்துக்கு மிகப்பெரிய உழைப்பைக் கொடுத்துள்ளார்.” எனப் பேசியுள்ளார்.