செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By cauveri manickam
Last Updated : வியாழன், 22 ஜூன் 2017 (14:56 IST)

கீர்த்தி சுரேஷ் படத்தில் ஜூனியர் என்.டி.ஆர்.

கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடிக்கும் படத்தில், முக்கிய வேடத்தில் நடிக்கிறார் ஜூனியர் என்.டி.ஆர்.


 

சிவாஜி கணேசன் நடித்த ‘கர்ணன்’ படத்தில், கிருஷ்ணனாக நடித்தவர் என்.டி.ராமாராவ். அதன்பிறகு, அவர்கள் குடும்பத்தில் இருந்து தமிழ்ப் படங்களில் ஒருவர் கூட நடிக்கவில்லை. தெலுங்குப் படங்களில் நடித்தால் மட்டும் போதும் என்று இருந்துவிட்டனர். இந்நிலையில், என்.டி.ஆரின் பேரனான ஜூனியர் என்.டி.ஆர்., தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்கிறார்.

நாக் அஸ்வின் இயக்கிவரும் இந்தப் படத்தில், சாவித்ரியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். அவருடைய கணவர் ஜெமினி கணேசனாக துல்கர் சல்மான் நடிக்கிறார். சமந்தா, பத்திரிகையாளராக நடிக்கிறார். விஜய் தேவர்கொண்டா, சமந்தாவுக்கு ஜோடியாக நடிக்கிறார். ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில், இந்தப் படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது.