விஜய்க்காக ஜூலி என்ன செய்தார் தெரியுமா?

Julie
CM| Last Updated: புதன், 14 பிப்ரவரி 2018 (11:58 IST)
விஜய் படத்தில் நடிப்பதற்காக விளம்பரப்பட வாய்ப்புகளைத் தியாகம் செய்துள்ளார் ஜூலி.

 
ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் பிரபலமாகி, விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி மூலம் செலிபிரிட்டியாக ஆனவர் ஜூலி. அதன்பிறகு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் ‘ஓடி விளையாடு பாப்பா’ நிகழ்ச்சியின் தொகுப்பாளர் ஆனார்.
 
விமல் தயாரித்து, நடித்த ‘மன்னர் வகையறா’ படத்தில் கெஸ்ட் ரோலில் தலைகாட்டிய ஜூலி, ‘உத்தமி’ என்ற படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். மேலும், அப்பள விளம்பரத்தில் நடித்தவர், தற்போது ஆட்டோமொபைல் ஆயில் விளம்பரத்தில் நடித்துள்ளார்.
 
இந்நிலையில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் ‘தளபதி 62’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் ஜூலி. விளம்பரங்களில் அதிகமாக நடித்தால் கேரக்டரின் தன்மை அடிபட்டுப் போய்விடும் என்பதற்காக, இந்தப் படம் ரிலீஸாகும்வரை வேறு எந்த விளம்பரத்திலும் நடிக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டார்களாம். 
 
‘விஜய்க்காக என்ன வேணும்னாலும் செய்வேன்’ என்ற ஜூலி, புதிதாக வரும் விளம்பர வாய்ப்புகளைத் தவிர்த்து வருகிறாராம். வருகிற தீபாவளிக்கு ‘தளபதி 62’ ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :