Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

நயன்தாராவை விட பிரபலமான ஜூலி தான் என் படத்தின் நாயகி: காமெடி நடிகர்

சனி, 29 ஜூலை 2017 (00:52 IST)

Widgets Magazine

வடிவேலு, சந்தானம் ஆகியோர் நடித்த படங்களில் சிறுசிறு கேரக்டரில் நடித்தவர் நகைச்சுவை நடிகர் கூல் சுரேஷ். இவர் தற்போது சொந்த படம் ஒன்றை தயாரிக்கவுள்ளதாகவும் இந்த படத்தில் ஜூலி தான் நாயகி என்றும் அறிவித்துள்ளார். 
 
ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது பொதுமக்களின் அமோக ஆதரவை பெற்ற ஜூலி, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் மரியாதையுடன் பார்க்கப்பட்டார். கோடியில் ஒருவருக்கு கிடைக்கக்கூடிய வாய்ப்பு ஜூலிக்கு கிடைத்துள்ளதாக சமூகவலைத்தளங்களில் பாராட்டுக்கள் அவருக்கு குவிந்தது. ஆனால் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தாமல் தற்போது எல்லோர் மனதிலும் அவர் வில்லியாக பார்க்கப்படுகிறார். 
 
இந்த நிலையில் நகைச்சுவை நடிகர் கூல்சுரேஷ்,  தான் தயாரிக்கவிருக்கும் படத்தில் ஜூலியை நாயகியாக்க விரும்புவதாகவும் இதுகுறித்து அவர் வெளியே வந்தவுடன் பேச்சுவார்த்தை  நடத்தப்படும் என்றும் அவர் கூறினார். நயன்தாரா, ஹன்சிகாவை விட மிகக்குறுகிய நாட்களில் பிரபலமானவர் என்பதால் அவரை நாயகியாக தேர்வு செய்ததாக அவர் மேலும் கூறினார்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

சொன்னபடி நடந்துக்க முடியவில்லை! மன்னிப்பு கேட்ட விக்னேஷ் சிவன்

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் 'நானா ...

news

கேனத்தனமான டாஸ்க்: விஜய் டிவிக்கு வலுக்கும் எதிர்ப்பு

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஏற்கனவே ஜூலிக்கும், ஓவியாவுக்கும் பிரச்சனை நடந்து வருவது அனைவரும் ...

news

ஓவியாவை வில்லியாக்க முயலும் விஜய் டிவி: கொந்தளிப்பில் புரட்சிப்படை

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் ஓவியாவுக்கு லேடி சூப்பர் ஸ்டார் பட்டம் ...

news

என்னை ஆரம்பிக்க வச்சிராதிங்க! கமல் எச்சரிக்கை

கடந்த சில நாட்களாகவே தமிழக அமைச்சர்களுக்கு எதிராக கமல் தொடுத்துள்ள டுவிட்டர் போரால் ...

Widgets Magazine Widgets Magazine