வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Updated : வெள்ளி, 23 பிப்ரவரி 2024 (19:22 IST)

நீ வர்றேன்னு தெரிஞ்சதுக்கு அப்புறம் பயமா இல்லை: ‘ஜோஷ்வா இமைபோல் காக்க’ டிரைலர்..!

கௌதம் மேனன் இயக்கத்தில் உருவான ‘ஜோஷ்வா இமை போல் காக்க’ என்ற திரைப்படம் கடந்த பல ஆண்டுகளாக ரிலீஸ் ஆகாமல் முடங்கி இருந்த நிலையில் வரும் மார்ச் ஒன்றாம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆக இருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் சற்று முன் நடிகர் விஜய் சேதுபதி தனது சமூக வலைதள பக்கத்தில் இந்த படத்தின் டிரைலரை வெளியிட்டுள்ள நிலையில் இந்த ட்ரெய்லர் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

பிக் பாஸ் வருண் நாயகனாகவும் ராஹேல் என்பவர் நாயகியாகவும் நடித்துள்ள இந்த படத்தில் விஜய் டிவி டிடி முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். மேலும் நடிகர் கிருஷ்ணா இந்த படத்தில் வில்லனாக நடித்துள்ளார்

கார்த்திக் இசையில் கௌதம் மேனன் இயக்கத்தில் ஐசரி கணேஷ் தயாரிப்பில் உருவாகிய இந்த படம் முழுக்க முழுக்க அதிரடி ஆக்சன் மற்றும் ரொமான்ஸ் கலந்த கதை அம்சம் கொண்டது என்பது இந்த ட்ரெய்லரில் இருந்து தெரிய வருகிறது

கௌதம் மேனன் ரசிகர்களுக்கு ஒரு சரியான விருந்தாக இந்த படம் இருக்கும் என்றும் கெளதம் மேனனுக்கு மற்றொரு வெற்றி படம் உறுதியாகியுள்ளது என்பதும் இந்த ட்ரைலரை பார்த்தவுடன் புரிந்து கொள்ள முடிகிறது

Edited by Siva