Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஒல்லி நடிகரைப் பார்த்து பயந்த நடிகை

வியாழன், 3 ஆகஸ்ட் 2017 (14:13 IST)

Widgets Magazine

ஒல்லி நடிகரின் படம் ரிலீஸாவதால், அடுத்த வாரம் வெளியாக இருந்த நடிகையின் படம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. 
ஒரு மிகப்பெரிய படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம், பல படங்களின் ரிலீஸ் தேதியை மாற்றிவிடுகிறது. அதற்கு, படமே உதாரணம். அவருடைய படம் வருகிற 10ஆம் தேதி ரிலீஸாவதாக இருந்தது. ஆனால், அந்தப் படம் திடீரென ரிலீஸ் தேதியை தள்ளி வைத்ததால், ஆளாளுக்கு போட்டி போட்டுக்கொண்டு அடுத்த வாரம் தங்களுடைய படங்களை ரிலீஸ் செய்ய முன்வந்தனர்.

காரணம், சுதந்திர தின விடுமுறை என்பதால், நான்கைந்து நாட்களுக்கு நல்ல கூட்டம் வரும். அப்படி போட்டி போட்டிக்கொண்டு அறிவித்த படங்களில், திருமணத்துக்குப் பின் சில வருடங்கள் கழித்து நடிக்கவந்த நடிகையின் படமும் ஒன்று. பெண்களைப் பற்றிய இந்தப் படம் தயாராகி சில மாதங்கள் ஆனாலும், சரியான ரிலீஸ் தேதிக்காக காத்திருந்தது. எனவே, அடுத்த வாரம் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில்தான், சிவபூஜையில் கரடி போல உள்ளே நுழைந்தார் ஒல்லி நடிகர். கடந்த மாதமே ரிலீஸாகியிருக்க வேண்டிய அவருடைய படத்தை, அடுத்த வாரம் ரிலீஸ் செய்யப்போவதாக அறிவித்தார். இது ஏற்கெனவே ஹிட்டான படத்தின் இரண்டாம் பாகம் என்பதாலும், படத்துக்கு எதிர்பார்ப்பு இருப்பதாலும், மற்ற படங்கள் எல்லாம் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என ஓடிவிட்டன. அதில், ஒளி நடிகையின் படமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

நடிகை த்ரிஷா பாக்ஸிங் பயிற்சி செய்யும் வைரல் வீடியோ!

நடிகை த்ரிஷா பாக்ஸிங் சண்டைப் பயிற்சி செய்யும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி ...

news

பாக்யராஜ் விமர்சனத்திற்கு நொண்டி சாக்கு சொன்ன இனியா

சமீபத்தில் நடைப்பெற்ற திரைப்பட நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்ட பாக்யராஜ், நடிகை இனியா ...

news

திலீப்பின் மேனேஜர் அப்புண்ணி அப்ரூவர் ஆகிறார்...

கேரள நடிகை கடத்தப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நடிகர் திலீப்பின் மேனேஜர் ...

news

பிக்பாஸ் கால் பண்ணாத வரை சாப்பிட மாட்டேன்; அடம்பிடிக்கும் ஓவியா - வீடியோ!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகை ஓவியா-ஆரவ் காதல் கதையில் எதிர்பார்ப்பு அதிகரித்து கொண்டே ...

Widgets Magazine Widgets Magazine