வெள்ளி, 1 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 7 மே 2022 (09:18 IST)

AK 61 படத்தில் இணைந்த சார்பட்டா நடிகர்?… வெளியான தகவல்!

அஜித் 61 படத்தில் சார்பட்டா படத்தில் நடித்த ஜான் கொக்கன் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

அஜித்தின் 61வது படப்பிடிப்பு சமீபத்தில் ஐதராபாத்தில் சிறிய பூஜையுடன் தொடங்கியதாக தகவல் வெளியாகியுள்ளன. இந்த பிலிம் சிட்டியில் சென்னை அண்ணா சாலை போன்ற செட் போடப்பட்டு படப்பிடிப்பிற்காக தயார் நிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படம் ஒரு வங்கிக் கொள்ளை சம்மந்தப்பட்ட படம் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் தற்போது வங்கி மாதிரி போடப்பட்ட செட்டில்தான் H வினோத் படப்பிடிப்பை நடத்தி வருகிறாராம். இந்நிலையில் இந்த படத்தில் அசுரன் பட நாயகி மஞ்சி வாரியர் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் படத்தைப் பற்றிய மற்றொரு சுவாரஸ்யமான தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்தில் பாகுபலி, கேஜிஎப் படங்களில் நடித்த, சார்பட்டா பரம்பரை படத்தில் வேம்புலியாகக் கலக்கிய ‘ஜான் கொக்கன்’ முக்கியமான வேடத்தில் நடிப்பதாக சொல்லப்படுகிறது. இவர் ஏற்கனவே அஜித்தோடு வீரம் படத்தில் ஒரு சிறு வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.