வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வெள்ளி, 31 ஜூலை 2015 (18:55 IST)

400 திரையரங்குகளில் தெலுங்கு ஜில்லா - நேசன் வெளியிட்ட தகவல்

விஜய், மோகன்லால் நடித்த ஜில்லா படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய முயற்சிகள் நடந்தன. படத்தை ரீமேக் செய்வதால், அதன் தெலுங்கு டப்பிங் வெளியாகவில்லை.
 

 
ஜில்லாவை ரீமேக் செய்ய அதன் இயக்குனர் நேசன் எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. முன்னணி நடிகர்கள் ஜில்லா கதையை புறக்கணித்ததே காரணம். இனியும் தாமதிப்பதில் பலனில்லை என தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி ஜில்லாவின் தெலுங்கு டப்பிங்கை வெளியிட்டார்.
 
எதிர்பார்த்ததைவிட ஜில்லாவின் தெலுங்கு டப்பிங் நல்ல வசூலை பெற்றுள்ளது. முக்கியமாக படத்தை வெளியிட்ட தெலுங்கு விநியோகஸ்தர்கள் லாபம் அடைந்துள்ளனர். அதனைத் தொடர்ந்து படத்தின் சக்சஸ் மீட் நடத்தப்பட்டது.
 
இதில் பேசிய நேசன், ஜில்லா தெலுங்கு பதிப்பை 350 திரையரங்குகளில் வெளியிட்டனர். இப்போது மேலும் 50 திரையரங்குகளில் படத்தை வெளியிட்டுள்ளனர் என்றார்.
 
தமிழகத்திலேயே ஜில்லாவுக்கு இவ்வளவு திரையரங்குகள்தான் கிடைத்தன. இப்போது டப்பிங் படத்துக்கும் அதே அளவு திரையரங்குகள். 
 
ஷாக்காதான் இருக்கு.