செவ்வாய், 30 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 16 ஏப்ரல் 2024 (11:01 IST)

பிரபல ஓடிடியில் வெளியான ஜீவா நடித்த தெலுங்கு படமான யாத்ரா 2!

தமிழ் சினிமாவில் சில ஆண்டுகளுக்கு முன்புவரை மார்க்கெட்டில் இருந்தவர் நடிகர் ஜீவா. அவர் நடித்த கோ, நண்பன்,ஈ உள்ளிட்ட பல படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்தன. ஆனால் அந்த வெற்றிகளை தக்கவைத்துக் கொள்ளும் விதமாக அவர் அடுத்தடுத்த படங்களை தேர்வு செய்யவில்லை. இதனால் தோல்விப் படங்களாகக் கொடுத்து இப்போது தனக்கான இடத்துக்காக போராடி வருகிறார்.

இந்நிலையில் அவர் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் கதாபாத்திரத்தில் யாத்ரா 2 திரைப்படத்தில் நடித்தார். ஜெகன் மோகன் ரெட்டியின் தந்தையும் முன்னாள் முதல்வருமான ராஜசேகர ரெட்டியின் பயோபிக், ‘யாத்ரா’ என்ற பெயரில் எடுக்கப்பட்டு அதில் மம்மூட்டி நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த திரைப்படம் பிப்ரவரி மாதம் 8 ஆம் தேதி ரிலீஸ் ஆனது. இந்த படத்துக்கு எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பு இல்லை. இந்நிலையில் இப்போது அமேசான் ப்ரைம் தளத்தில் ஐந்து மொழிகளில் இந்த படம் ஸ்ட்ரீம் ஆகி வருகிறது.