வியாழன், 19 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 1 ஆகஸ்ட் 2024 (11:56 IST)

மார்க்கெட் நிலவரம் தெரியாம சம்பளம் கேட்கும் ஜீவா… சிவா மனசுல சக்தி 2 தாமதத்துக்கு இதுதான் காரணமா?

இயக்குனர் ராஜேஷின் முதல் படம் சிவா மனசுல சக்தி படத்தில் நடித்த ஜீவா மீண்டும் ராஜேஷின் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிவா மனசுல சக்தியின் வெற்றியால் அடுத்தடுத்த படங்கள் இயக்கி தொடர்ந்து மூன்று ஹிட் கொடுத்தார் ராஜேஷ். கதையே இல்லாமல் எப்படி ஹிட் தருகிறார் என எல்லோருக்கும் ஆச்சரியம். அந்த திருஷ்டி நான்காவது படத்தில் கழிந்தது.

அடுத்தடுத்து அவர் இயக்கிய அனைத்து படங்களும் மோசமான விமர்சனங்களைப் பெற்றன. அதுபோல ஜீவாவும் மோசமான படங்களாகக் கொடுத்து மார்க்கெட் அவுட் ஆனார். அதனால் இப்போது இருவருமே ஒரு ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

இதையடுத்து சிவா மனசுல சக்தி இரண்டாம் பாகம் எடுக்க இருவரும் திட்டமிட்டுள்ளதாக சொல்லப்பட்டது. ஆனால் அதைப் பற்றி மேலதிக தகவல் எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில் ஜீவாவின் சம்பள விஷயம் காரணமாகவே அந்த படம் தாமதம் ஆகி வருவதாக சொல்லப்படுகிறது. சமீபகாலமாக ஹிட்டே கொடுக்காத ஜீவா 4 கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம் கேட்பதால்தான் அந்த படம் தொடங்கப்படுவதில் தாமதம் ஏற்படுவதாக சொல்லப்படுகிறது.