செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : திங்கள், 4 நவம்பர் 2019 (14:32 IST)

இமான் இசையில் கலக்கலான "ஜிகிரி தோஸ்த்து" - "நம்ம வீட்டு பிள்ளை" வீடியோ பாடல்!

அண்ணன் தங்ககை பாசம் , கிராமத்து வாழக்கை , காதல் , உறவுகள் என அத்தனை அமசங்களையும் உள்ளடக்கி கமர்ஷியல் படமாக கடந்த செப்டம்பர் மாதம் வெளிவந்த படம் நம்ம வீட்டு பிள்ளை.  இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு வசூல் ரீதியாகவும் வெற்றிப்பெற்றது. சிவகார்த்திகேயனுக்கு நம்ம வீட்டு பிள்ளை நல்ல வாய்ப்பு கொடுத்தது. 
இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியவந்த இப்படம் பாரதிராஜாவின் குடும்பத்தை சுற்றி சொந்த பந்தங்களை பற்றியும் அதில் ஏற்படும் சண்டை சர்ச்சரவுகளை பற்றியும் அழகாக கூறியிருந்தார் இயக்குனர். சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ், பாரதி ராஜா, நட்டி, சமுத்திரகணி  ஆகியோர் நடித்திருந்த இப்படத்திற்கு டி. இமான் இசையமைந்திருந்தார். இதில் இடம் பெற்ற "எங்க அண்ணன்" பாடல் பட்டிதொட்டியெங்கும் பிரபலமடைந்தது. 
 
இந்நிலையில் தற்போது இப்படத்தில் இடம்பெற்ற  "ஜிகிரி தோஸ்த்து" என்ற வீடியோ பாடல் யுடியூபில் வெளிவந்துள்ளது. அருண் ராஜா காமராஜ் எழுதியுள்ள இப்பாடல் கிராமத்து நட்பை அழகாக விவரிக்கிறது.