வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : திங்கள், 20 நவம்பர் 2023 (14:29 IST)

தீபாவளி ரேஸில் 'ஜப்பானை' முந்திய 'ஜிகர்தண்டா XX'

japan vs Jigarthanda 2
இந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸான ஜப்பான் படத்தை பின்னுக்குத் தள்ளியுள்ளது ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம்.

தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் கார்த்தி.  இவரது 25 ஆவது படம் ஜப்பான். இந்த படத்தை இயக்குனர் ராஜுமுருகன் இயக்க, ஜிவி பிரகாஷ் இசையமைக்க எஸ்ஆர் பிரபு தயாரித்து வருகிறார். இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக அனு இம்மானுவேல் நடித்துள்ளார்.

இப்படம் கடந்த தீபாவளிக்கு ரிலீஸாகி கலவையான விமர்சனங்கள் பெற்றது. இப்படம் வெளியாகி 9 நாளில் ரூ;.32 கோடி வசூலை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகிறது.

அதேபோல், இப்படத்திற்கு போட்டியாக ரிலீஸான படம் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ். இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருந்தார். இதில், ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே. சூர்யா நடித்திருந்தனர்.

இப்படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளிட்ட பிரபலங்கள் பாராட்டியிருந்தனர்.

இந்த நிலையில், இந்த தீபாவளி ரேஸில் கார்த்தியின் 'ஜப்பான்' பட வசூலை முறியடித்து,  கார்த்திக் சுப்புராஜின்  'ஜிகர்தண்டா 2' படம் ரூ.52 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகிறது.