1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: புதன், 4 மார்ச் 2015 (14:02 IST)

நயன்தாரா, ஜெயராமுக்கு நகராட்சி ஜப்தி நோட்டீஸ்

நீலகிரி மாவட்டம் ஊட்டி லவ்டேல் சாலையில், ராயல் காஸ்டில் என்ற பெயரில் உள்ள அடுக்குமாடி கட்டடத்தில், 142 வீடுகள் உள்ளன. 
 

 
இதில் நடிகை நயன்தாரா, நடிகர் ஜெயராம் ஆகியோருக்கு வீடுகள் உள்ளன. இந்த குடியிருப்பில் உள்ள பெரும்பாலானவர்கள் நகராட்சிக்கு சொத்துவரி செலுத்தவில்லை. அதனால் சொத்து வரி செலுத்தாத நயன்தாரா, ஜெயராம் உள்ளிட்டவர்களுக்கு நகராட்சி ஜப்தி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
 
உடனடியாக சொத்துவரி செலுத்தவில்லை எனில் குடிநீர் இணைப்பு, பாதாள சாக்கடைஇணைப்பு ஆகியவை துண்டிக்கப்படும், ஜப்தி நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என நகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.