வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Updated : புதன், 31 ஜனவரி 2018 (20:45 IST)

அஹமது இயக்கத்தில் நடிக்கும் ஜெயம் ரவி

மோகன் ராஜா படத்தைத் தொடர்ந்து அஹமது இயக்கும் படத்தில் நடிக்கிறார் ஜெயம் ரவி.

 
ஜெயம் ரவி நடிப்பில் ‘டிக் டிக் டிக்’ படம் ரிலீஸுக்காக காத்திருக்கிறது. சக்தி செளந்தர்ராஜன் இயக்கியுள்ள இந்தப் படத்தில், நிவேதா பெத்துராஜ் ஜெயம் ரவி ஜோடியாக நடித்துள்ளார். ஜெயம் ரவியின் மகன் ஆரவ், வின்செண்ட் அசோகன், ரமேஷ் திலக் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
 
இந்தப் படத்தைத் தொடர்ந்து கார்த்திக் தங்கவேல் நடிக்கும் ‘அடங்க மறு’ படத்தில் நடிக்கிறார் ஜெயம் ரவி. இதைத் தொடர்ந்து ஜெயம் ரவியின் 25வது படத்தை, அவருடைய அண்ணன் மோகன் ராஜா இயக்க இருக்கிறார். 
 
அதற்கடுத்து ஜெயம் ரவியின் 26வது படத்தை ஐ.அஹமது இயக்கவுள்ளார். இவர் ‘என்றென்றும் புன்னகை’, ‘மனிதன்’ படங்களை இயக்கியவர். அக்‌ஷய் குமார் நடிப்பில் வெளியான ‘பேபி’ ஹிந்திப் படத்தைத்தான் அஹமது ரீமேக் செய்யப் போகிறார் என்று தகவல் வெளியானது. ஆனால், அதை மறுத்துள்ளார் அஹமது.