1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 29 ஆகஸ்ட் 2023 (07:52 IST)

ஜெயம் ரவி –ராஜேஷ் இணையும் படத்தின் டைட்டில் ரிலீஸ் எப்போது?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஜெயம் ரவி. அவர் நடிப்பில் கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான ஜெயம் படத்தின் வெற்றியால் ‘ஜெயம்’ ரவி என்றே அழைக்கப்பட்டு வருகிறார். அவரின் அண்ணன் இயக்கத்தில் அடுத்தடுத்து பல வெற்றிப் படங்களில் நடித்து முன்னணி இடத்தைப் பிடித்த ஜெயம் ரவி பேராண்மை, தனி ஒருவன் பாராட்டத்தக்க படங்களை கொடுத்துள்ளார்.

இப்போது நான்கு படங்களில் ஒரே நேரத்தில் நடித்து வருகிறார் ஜெயம் ரவி. அதில் இயக்குனர் எம் ராஜேஷ் இயக்கும் படமும் அடக்கம். இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இந்த படத்தின் டைட்டிலை செப்டம்பர் 10 ஆம் தேதி ஜெயம் ரவியின் பிறந்தநாளை முன்னிட்டு ரிலீஸ் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கிடையில் ஜெயம் ரவியின் மெகா ஹிட் படமான தனி ஒருவன் படத்தின் இரண்டாம் பாகத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த படம் அடுத்த ஆண்டு தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.