Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

யானைகளிடம் மாட்டிக்கொண்ட ஜெயம் ரவி

திங்கள், 17 ஏப்ரல் 2017 (11:38 IST)

Widgets Magazine

பட ஷூட்டிங்கின்போது யானைகளிடம் ஜெயம் ரவி உள்பட ஒட்டுமொத்த படக்குழுவும் மாட்டிக் கொண்டதாகத் தெரியவந்துள்ளது.
 

 

சக்தி செளந்தர்ராஜன் இயக்கத்தில், ஜெயம் ரவி – நிவேதா பெத்துராஜ் நடித்துவரும் படம் ‘டிக் டிக் டிக்’. ‘மிருதன்’ படத்தைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஜெயம் ரவியை இயக்கி வருகிறார் சக்தி செளந்தர்ராஜன். இந்தப் படத்தின் படப்பிடிப்பு, கேரள மாநிலத்தில் உள்ள மூணார் பகுதியில் சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றிருக்கிறது.
 
ஷுட்டிங் போவதற்கு முன்புதான் அந்தப் பகுதியில் யாரோ ஒருவர் யானை ஒன்றை சுட்டுக் கொன்றிருக்கிறார். இந்நிலையில், ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தபோது, அந்த வழியாக சில யானைகள் வந்திருக்கின்றன. பழிவாங்கத்தான் யானைகள் வந்திருக்கின்றன என்று ஒட்டுமொத்த படக்குழுவும் பயத்தில் அரண்டுபோய் நின்றிருக்கிறார்கள்.
 
ஆனால், அருகிலுள்ள ஏரிக்குச் சென்று நீர் அருந்திய யானைகள், இவர்களை சட்டை கூட செய்யாமல், வந்தவழியே திரும்பிப் போயிருக்கின்றன. அதற்குப் பிறகுதான் யூனிட்டில் இருந்தவர்களுக்கு உயிர் வந்ததாம். அசம்பாவிதம் எதுவும் நடக்கவில்லை என்றாலும், அந்த ‘திக் திக்’ நிமிடங்களை நினைத்தாலே பயம் வந்துவிடுகிறதாம் யூனிட் ஆட்களுக்கு.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

“காவிரி பிரச்னைக்கும், ‘பாகுபலி’க்கும் சம்பந்தம் இல்லை” - இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி

“காவிரி பிரச்னைக்கும், ‘பாகுபலி’ படத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” எனத் ...

news

எத்தனை கோடி கொடுத்தாலும் அந்த ஆளுடன் நடிக்க மாட்டேன்: நயன்தாரா தரப்பு ஆவேசம்

நாயகிக்கு முக்கியத்துவமான வேடங்களை மட்டுமே தேர்வு செய்து அஜித், விஜய் போன்ற மாஸ் ...

news

கடம்பன் - சினிமா விமர்சனம்

காட்டில் வசிக்கும் பழங்குடியின மக்கள் எப்படி அந்த வனத்தின் பாதுகாவலர்களாக இருக்கிறார்கள் ...

news

விரைவில் தல அஜீத்துடன் நடிப்பேன் - கீர்த்தி சுரேஷ் பேட்டி

விரைவில் நடிகர் அஜீத்துடன் இணைந்து நடிப்பேன் என நடிகை கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.

Widgets Magazine Widgets Magazine