வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: புதன், 7 ஜூன் 2023 (17:09 IST)

ஜெயம் ரவி - நயன்தாராவின் ‘இறைவன்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

ஜெயம் ரவி ஜோடியாக நயன்தாரா நடித்த இறைவன் என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்தது என்பதும் சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததாக செய்திகள் வெளியானது என்பதும் தெரிந்ததே. 
 
என்றென்றும் காதல் என்ற திரைப்படத்தை இயக்கிய அகமது இயக்கத்தில் உருவாகிய இந்த படத்தின் ரிலீஸ் தேதி இன்று அறிவிக்கப்படும் என செய்திகள் வெளியான நிலையில் சற்றுமுன் அதிகாரப்பூர்வ  ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இறைவன் திரைப்படம் ஆகஸ்ட் 25ஆம் தேதி வெளியாகும் என சற்று முன் அறிவிக்கப்பட்டுள்ளதோடு ரிலீஸ் தேதி உடன் கூடிய புதிய போஸ்டரும் வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகிய இந்த படத்தை ஃபேஷன் ஸ்டுடியோ என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. ஏற்கனவே நயன்தாரா. ஷாருக்கான் உடன் நடித்து வரும் ஜவான் திரைப்படம் செப்டம்பர் மாதம் ஐந்தாம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva