கத்தி பேசற வேலையெல்லாம் எங்கிட்ட வேணாம்: மும்தாஜூடன் மோதும் ஜனனி

Last Updated: செவ்வாய், 24 ஜூலை 2018 (21:45 IST)
பிக்பாஸ் வீட்டில் ஒரு நாளைக்கு எத்தனை சண்டை நடக்கின்றது? யார் யார் சண்டையில் கலந்து கொள்கின்றார்கள் என்று சரியாக கணித்து கூறுபவர்களுக்கு பரிசே கொடுக்கலாம். அந்த அளவுக்கு தினமும் ஏகப்பட்ட சண்டைகள். சண்டையில் கலந்து கொள்ளாத போட்டியாளர்களே இல்லை எனலாம். அந்த அளவுக்கு பிக்பாஸ் ரைட்டர்களின் ஸ்கிரிப்ட் உள்ளது.

இந்த நிலையில் இன்று காலை வெளிவந்த புரமோவில் ரித்விகாவும் ஐஸ்வர்யாவும் சண்டை போட்ட நிலையில் சற்றுமுன் வெளியாகியுள்ள புரமோ வீடியோவில் மும்தாஜூம் ஜனனியும் சண்டை போட்டு கொள்கின்றனர்.


ஷாரிக் குறித்து என்ன பேசினாய் என்று மும்தாஜ், ஜனனியிடம் கேட்க, அதற்கு கத்தி பேசற வேலையெல்லாம் எங்கிட்ட வேணாம் என்று மும்தாஜிடம் ஜனனி கோபமாக கூற, அதற்கு மும்தாஜ் மேலும் பயங்கரமாக கத்துகிறார். அப்போது ஜனனி காதில் விரலை வைத்து கொண்டு அங்கிருந்து மெதுவாக செல்கிறார். இதனால் மும்தாஜூக்கு மேலும் கடுப்பாகின்றது. ஜனனி ஊமையாக இருந்து மற்றவர்களை வெறுப்பேற்றும் கலையை சரியாக கற்று வைத்துள்ளதாக கூறப்படுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :