வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Updated : வெள்ளி, 20 ஜனவரி 2017 (13:06 IST)

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தெலுங்கு திரையுலக நட்சத்திரங்கள்!

ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், ஜல்லிக்கட்டை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று தமிழகத்தில் இளைஞர்களும், மாணவர்களும் போராட்டக்களத்தில் இறங்கியுள்ளனர். இளைஞர்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், தற்போது அவர்களுக்கு ஆதரவாக பல்வேறு தரப்பினரும் களத்தில் இறங்கியுள்ளனர்.

 
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான மகேஷ் பாபு தனது டிவிட்டர் பக்கத்தில், ஜல்லிக்கட்டு தமிழ்நாட்டின் உயிர்.  தங்களுடைய கோரிக்கைக்காக தமிழர்கள் இவ்வளவு ஒற்றுமையாக நடந்து கொள்வதை பார்க்கும் போது பெருமையாக உள்ளது.  அவர்களுடைய போராட்டத்திற்கு பலன் கிடைக்கும் என நம்புகிறேன். தமிழகத்தின் ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஆதரிக்கிறேன்  என்று தெரிவித்துள்ளார்.



 
இவரைப் போல பல்வேறு தெலுங்கு திரை நட்சத்திரங்களும் ஜல்லிக்கட்டுக்கான தங்கள் ஆதரவை சமூக வலைத்தளங்கள்  வாயிலாக பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது.