1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Modified: வியாழன், 11 ஜனவரி 2018 (17:37 IST)

ஜெய் படத்துக்கு கமல்ஹாசன் பட டைட்டில்?

ஜெய் நடிக்க இருக்கும் புதிய படத்திற்கு, கமல்ஹாசன் படத்தின் டைட்டிலை வைக்க ஆலோசனை நடைபெற்று வருகிறது.
‘எத்தன்’ படத்தை இயக்கிய சுரேஷ் இயக்கத்தில் ஹீரோவாக நடிக்கிறார் ஜெய். ஹாரர் படமான இதில், ஐடி இளைஞனாக நடிக்கிறார் ஜெய். ராய் லட்சுமி, கேத்ரின் தெரேசா, வரலட்சுமி சரத்குமார் என மூன்று ஹீரோயின்கள் இந்தப் படத்தில்  நடிக்கின்றனர்.
 
இந்தப் படத்துக்கு, ‘நீயா 2’ எனத் தலைப்பு வைக்க படக்குழுவினர் யோசித்து வருகின்றனர். கமல்ஹாசன், ஸ்ரீபிரியா நடிப்பில் 1979ஆம் ஆண்டு ரிலீஸான ஹாரர் படம் ‘நீயா’. இந்தப் படம் அதன் இரண்டாம் பாகம் போல திகில் நிறைந்ததாக  இருக்கலாம் என்கிறார்கள்.