வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: வெள்ளி, 6 மார்ச் 2015 (11:13 IST)

ஏஞ்சலினா ஜோலியாக ஆசைப்படும் ஜெய் குஹைனி

ஜெய் குஹைனியை நினைவு இருக்கிறதா? ஆரோகணம் படத்தில் அறிமுகமானவர்? ஞாபகம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் சிஎஸ்கே படத்தை ஒருமுறை பார்த்துவிடுங்கள். சாகஸத்தில் பின்னியிருக்கிறார் குஹைனி.
சிஎஸ்கே என்றால் சென்னை சூப்பர் கிங்ஸ். அது மைதானத்தில். இங்கு சார்லஸ் ஷபிக் கார்த்திகா என்பதன் சுருக்கம். இதில் கார்த்திகா என்ற வேடத்தில் நடித்துள்ளார் குஹைனி. படம் குறித்து அவர் சொல்வதை கேட்போம்.
 
"சி.எஸ்.கே படத்தில் கார்த்திகா எனும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளேன். படத்தில் எனக்கு வசனங்கள் குறைவு. நடிப்பிற்கு இடம் அதிகமாகவே இருந்தது. நடிக்கவே வேண்டாம் என்று முடிவெடுத்த போது இந்த கதையை இயக்குனர் சத்யா என்னிடம் கூறினார். உடனே முடிவை மாற்றிக்கொண்டேன். 
 
200 லிட்டர் தண்ணீர் இருக்கும் டேங்கில் கைகால் கட்டி முங்க விட்டது, கையை கட்டி இரண்டு மாடிகள் தரதரவென இழுத்து சென்றது என ஒரு ஹீரோவுக்கு நிகராக காட்சிகள் இருந்தது. இத்தகைய காட்சிகள் டூப் போடாமல் நடித்ததில் உடலில் காயங்கள் ஏற்பட்டாலும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது."
 
ஆக்ஷன் காட்சிகளில் நடித்ததால், ஹாலிவுட்டின் ஏஞ்சலினா ஜோலி போன்று சண்டைக் காட்சிகளில் நடித்து பெயர் வாங்க வேண்டும் என ஆசைப்படுகிறார் குஹைனி.
 
அடுத்தப் படத்தில் கிளாமராக நடித்தால் மோனிகா பெலூசியாக ஆசைப்படுவாரோ?