திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 11 மார்ச் 2021 (15:36 IST)

டாக்டர் ரிலீஸ் தள்ளிவைப்பு…. அதனால் ஜகமே தந்திரம் ரிலீஸ் ஆகுமா?

சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் திரைப்படம் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டுள்ள நிலையில் அந்தநாளில் ஜகமே தந்திரம் ரிலீஸ் ஆகும் என சொல்லப்படுகிறது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகி இருக்கும் டாக்டர் திரைப்படம் மார்ச் 26 ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தேர்தல் காரணங்களால் அந்த படம் தேர்தலுக்குப் பின்னரே ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இப்போது மார்ச் 26 ஆம் தேதி தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம் திரைப்படம் நெட்பிளிக்ஸில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.