கொங்காஸ் கூட்டத்தில் இணைந்திடுங்கள்! – தனுஷ் ரசிகர்களுக்கு நெட்பிளிக்ஸ் அழைப்பு!
தனுஷ் நடிப்பில் உருவான ஜகமே தந்திரம் ஓடிடியில் வெளியாகும் நிலையில் ரசிகர்கள் நிகழ்ச்சி ஒன்றை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில ஜகமே தந்திரம் படம் தயாராகி ரிலிஸுக்கு காத்திருக்கிறது. வொய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் ரிலையன்ஸ் என்டேர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம் இணைந்து இப்படத்தினை தயாரித்துள்ளனர். தனுஷிற்கு ஜோடியாக மலையாள நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி இப்படத்தில் நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தை வாங்கியுள்ள நெட்பிளிக்ஸ் ஓடிடி தளம் ஜூன் 18 ஆம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய உள்ளது. இந்நிலையில் அதற்கு முதல் நாளான ஜூன் 17 அன்று உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் கலந்து கொள்ளும் ஆன்லைன் நிகழ்ச்சி ஒன்றை நெட்ப்ளிக்ஸ் நடத்த உள்ளது. மாலை 4 மணியளவில் நடக்க இருக்கும் இந்த கொண்டாட்டத்தில் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.