வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 25 நவம்பர் 2021 (14:54 IST)

அந்நியன் ரீமேக்கில் ஜாக்கி சான்! தயாரிப்பாளர் அறிவிப்பு!

இயக்குனர் ஷங்கர் ரன்வீர் சிங்கை கதாநாயகனாக வைத்து அந்நியன் படத்தை ரீமேக் செய்ய உள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்த அந்நியன் திரைப்படம் விரைவில் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளது. இந்த படத்தை இயக்குனர் ஷங்கரே ரன்வீர் சிங்கை வைத்து இயக்குகிறார். இந்நிலையில் தமிழ் அந்நியன் படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் தன்னுடைய அனுமதி இல்லாமல் ரீமேக் செய்ய கூடாது என ஷங்கருக்கு அறிக்கை வெளியிட்டு இருந்தார். மேலும் அந்நியன் படத்தின் கதை உரிமை தன்னிடம்தான் உள்ளது என்றும் அதை தன் அனுமதி இல்லாமல் படமாக்க முடியாது என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில் இப்போது அந்நியன் படத்தின் ரீமெக்கை ஜாக்கி சான் மற்றும் மற்றொரு பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகரை வைத்து தயாரிக்க உள்ளதாக இப்போது ரவிச்சந்திரன் தரப்பில் சொல்லப்படுகிறது. ஜாக்கி சானின் பல படங்களை வாங்கி தமிழகத்தில் வெளியிட்டவர் ஆஸ்கர் ரவிச்சந்திரன். இதனால் இருவருக்கும் இடையே நல்ல நட்பு உண்டு.