செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : சனி, 21 டிசம்பர் 2019 (16:13 IST)

பார்க்கவேண்டியதை மட்டும் பாருங்க - கொதித்தெழுந்த ஷாலு ஷம்மு!

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடிகர் சூரிக்கு காதலியாக நடித்து பிரபலமானவர் ஷாலு ஷம்மு. அந்த படத்தில் அவரது கதாபாத்திரம் பரவலாக பேசப்பட்டதை அடுத்து  தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும், றெக்க, திருட்டுப் பயலே 2 என பல படங்களில் நடித்தார். அதன்பின், அவருக்கு பெரிதாக வாய்ப்பு எதுவும் கிடைக்கவில்லை.
 
கடந்த சில நாட்களாக சினிமாவில் வாய்ப்பு தேடி வந்த ஷாலு ஷம்முவுக்கு வாய்ப்புகள் ஏதும் கிடைக்காததால் பிக் பாஸில் நுழைய முயற்சித்தார். ஆனால் தனக்கு கிடைக்கவிருந்த வாய்ப்பை மீரா மிதுன் தட்டிச்சென்று விட்டதாக ஒரு நேர்காணனில் கூறியிருந்தார் . இதையடுத்து கடந்த சில நாட்களாகவே கவர்ச்சியான நடனமாடி சர்ச்சைக்குரிய நடிகையாக பார்க்கப்பட்ட ஷாலு ஷம்மு சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்று கூறியதாவது. 
 
சினிமாத்துறை முன்பு இருந்ததைவிட தற்போது பெண்களுக்கு போட்டி, ஆரோக்கியம் அதிகமாக  இருக்கிறது. நான் 'மீ டூ'வை பற்றி யதார்த்தமாக கூறிய கருத்து பெரும் சர்ச்சைக்கு உள்ளானது. மேலும் நான் ஆடிய நடன வீடியோவும் சர்ச்சைக்குள்ளாகி ட்ரோல் செய்து ஒதுக்கி விடுகின்றனர். இதனால் கிடைக்கின்ற வாய்ப்பும் பறிபோகிறது.  எனவே நடிகைகளுக்கு நடிப்பு  திறமை இருக்கிறதா என்று மட்டும் பார்த்தால் போதும், நடிப்பவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று பார்க்க தேவையில்லை. இந்த ஒரு விஷயம் மட்டும் சினிமா துறையில் மாறினால் நன்றாக இருக்கும் என அவர் கூறினார்.