1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: திங்கள், 7 ஜனவரி 2019 (10:36 IST)

வரும் 10ம் தேதி இங்கு மட்டும் அஜித்தின் விஸ்வாசம் படம் ரிலீஸ் இல்லை

சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் தல அஜித் நடித்துள்ள விஸ்வாசம் படம் வெளியாக இன்னும் 3 நாட்களே உள்ளது. அனைத்து பகுதியிலும் திரையரங்குகளில் படத்திற்கான புக்கிங் தொடங்கிவிட்டது. 
படத்தை முதல் நாளே பார்க்க வேண்டும் என்று ரசிகர்கள் அடித்துபிடித்து டிக்கெட் வாங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
 
விஸ்வாசம் படம் வெளியாகும் சந்தோஷத்தில் கட் அவுட் மற்றும் பேனர்களால் திரையரங்குகளை அஜித் ரசிகர்கள் அலங்கரித்து  வருகிறார்கள். இந்த பொங்கல் தங்களுக்கு தல பொங்கல் என கொண்டாடி மகிழ்ந்து வருறிகிறார்கள். இந்நிலையில் தமிழில் ஜனவரி 10ம் தேதி வெளியாகும் அஜித்தின் விஸ்வாசம் படம் தெலுங்கில் அதே நாளில் வெளியாகவில்லை. ஒரு வாரம் கழித்து தான் அங்கு வெளியாக  இருக்கிறதாம்.