1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 22 ஜனவரி 2025 (12:32 IST)

புஷ்பா 2 தயாரிப்பாளரைத் தொடர்ந்து இயக்குனர் வீட்டிலும் வருமான வரிசோதனை!

பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா 2 சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய ஓப்பனிங்கைப் பெற்றது. ஹைதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டரில் இந்த படத்தை பார்க்க பெண் ஒருவர் தனது மகனுடன் சென்றிருந்த நிலையில், அல்லு அர்ஜுன் அங்கு வந்ததால் கூட்ட நெரிசல் அதிகமானது. இதில் சிக்கி அந்த பெண் உயிரிழந்தார். இதன் காரணமாக அல்லு அர்ஜுன் கைதாகி தற்போது ஜாமீனில் வெளியில் வந்துள்ளார்.

அல்லு அர்ஜுன் கைதுக்குப் பிறகு புஷ்பா 2 வசூல் 70 சதவீதம் அளவுக்கு உயர்ந்ததாக புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் படம் வெளியாகி ஒரு மாதத்தைத் தாண்டியுள்ள போதும் இன்னும் கணிசமான அளவு வசூல் செய்துகொண்டிருக்கிறது. இந்நிலையில் தற்போது படக்குழு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின் படி ‘புஷ்பா 2’ திரைப்படம் உலகளவில் இதுவரை 1850 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது.

வசூல் கணக்குகள் அதிகாரப்பூர்வமாக தயாரிப்பு நிறுவனமே அதிகாரப்பூர்வமாக அறிவித்த நிலையில் நேற்று மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர்கள் வீட்டில் வருமான வரிசோதனை நடந்தது. அதையடுத்து இன்று புஷ்பா பட இயக்குனர் சுகுமார் வீட்டிலும் வருமான வரிசோதனை நடத்தப்படுகிறது.